close
Choose your channels
Viruman
Laal

பிரபலத்தின் படத்திற்காக இணைந்த மணிரத்னம் - எஸ்.எஸ்.ராஜமெளலி!

Saturday, April 9, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழ் திரையுலகில் அறிமுகமாகும் ஒரு பிரபலத்திற்காக மணிரத்னம் மற்றும் எஸ்.எஸ்.ராஜமெளலி இணைந்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பிரபல தொழிலதிபர் லெஜண்ட் சரவணன் தயாரித்து நடித்த ‘தி லெஜெண்ட்’ என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகளும் இறுதிக்கட்டத்தில் உள்ளது.

இந்தநிலையில் இந்த படத்தின் சிங்கிள் பாடல் இன்று வெளியாக உள்ளதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில் இந்த பாடலை மணிரத்னம், எஸ்.எஸ்.ராஜமெளலி மற்றும் சுகுமார் ஆகிய மூன்று பிரபல இயக்குனர்கள் வெளியிட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது

லெஜண்ட் சரவணன் ஜோடியாக பிரபல பாலிவுட் நடிகை ஊர்வசி ரெளட்டாலா நடித்துள்ளார் என்பதும் இவர் மைக்ரோபயாலஜிஸ்ட் கேரக்டரில் நடித்திருப்பதாக கூறப்படுகிறது. தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், மலையாளம், என பான் -இந்தியா திரைப்படமாக உருவாகியிருக்கும் இந்த படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார் என்பதும் வேல்ராஜ் ஒளிப்பதிவில் ரூபன் படத்தொகுப்பில் இந்த படம் உருவாகி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.