close
Choose your channels
Raayan

பஞ்சம் பசி பார்த்த சனம்.. படை இருந்தும் பயந்த சனம்: 'மாமன்னன்' படத்தின் வடிவேலு பாடல்..!

Friday, May 19, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

மாரி செல்வராஜ் இயக்கத்தில், உதயநிதி ஸ்டாலின் மற்றும் வடிவேலு முக்கிய கேரக்டர்களில் நடித்த ’மாமன்னன்’ என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது விறுவிறுப்பாக தொழில்நுட்ப பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில் இந்த படத்தில் இசைப்புயல் ஏஆர் ரகுமான் கம்போஸ் செய்த பாடலை வடிவேலு பாடியுள்ளார் என்று ஏற்கனவே தகவல் வெளியான நிலையில் அந்த பாடல் சற்றுமுன் வெளியாகி இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

‘ராசா கண்ணு’ என்ற இந்த பாடல் முதல் முறை கேட்கும்போதே உருக வைக்கும் வகையில் இருப்பதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். நீண்ட இடைவேளைக்கு பிறகு வடிவேலு குரலில் அதுவும் ஏஆர் ரகுமான் இசையில் கேட்பது மனதிற்கு நிம்மதியை தருகிறது என்று கமெண்ட்கள் பதிவாகி வருகின்றன

உதயநிதி ஸ்டாலின், வடிவேலு, பகத் பாசில், கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவாகியுள்ள இந்த படம் தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவில். செல்வா படத்தொகுப்பில் உருவாகியுள்ளது. இந்த படத்தை ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் தயாரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. வடிவேலு குரலில் வெளியாகியுள்ள பாடலின் சில வரிகள் இதோ:

மலையில தான் தீப்பிடிக்குது ராசா
என் மனசுக்குள்ள வெடி வெடிக்குது ராசா

மலையில தான் தீப்பிடிக்குது ராசா
என் மனசுக்குள்ள வெடி வெடிக்குது ராசா

தவுல எடுத்து தாளம் அடி ராசா
தன்னானா தன்னானா பாடுவேன் ராசா

குச்சிக்குள்ள கிடந்த சனம்
கோணிச்சாக்குல சுருண்ட சனம்

பஞ்சம் பசி பார்த்த சனம்
படை இருந்தும் பயந்த சனம்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment
Related Videos