close
Choose your channels

'மாமன்னன்' ரத்னவேல் பாண்டியன் மனைவியின் ட்விட்.. என்ன செய்ய காத்திருக்கின்றனர் நெட்டிசன்கள்..!

Thursday, August 3, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

உதயநிதி ஸ்டாலின் நடிப்பில், மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவான ’மாமன்னன்’ திரைப்படம் கடந்த ஜூன் மாதம் திரையரங்குகளில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது. மேலும் இந்த படம் சமீபத்தில் ஓடிடியில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இந்த நிலையில் இந்த படத்தில் வில்லன் ரத்தினவேல் பாண்டியன் என்ற கேரக்டரில் நடித்த பகத் பாசில் காட்சிகளை எடிட் செய்து பின்னணியில் ஜாதி பெருமைகளை கூறும் பாடல்களை இணைத்து ஒரு சிலர் இணையத்தில் வைரல் ஆக்கினார் என்பதும் இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது என்பதையும் பார்த்தோம். இதனால் தனது பேஸ்புக்கில் ’மாமன்னன்’ பட போஸ்டரை பகத் பாசில் நீக்கினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ரத்தினவேல் பாண்டியன் மனைவி கேரக்டரில் நடித்த ரவீனா தனது சமூக வலைத்தளத்தில் ’இந்த கதாபாத்திரத்திற்கு இவ்வளவு அன்பு கிடைக்கும் என்று நான் எதிர்பார்க்கவில்லை. ஜோதி எப்போதும் என் மனதுக்கு நெருக்கமாக இருப்பாள் நன்றி’ என்று தெரிவித்துள்ளார்.

’மாமன்னன்’ திரைப்படத்தின் ரத்தினவேல் பாண்டியன் கேரக்டரின் சர்ச்சையே இன்னும் முடியாத நிலையில் அவருடைய மனைவி கேரக்டரில் நடித்த ரவீனாவின் இந்த ட்விட்டை வைத்தும் தற்போது நெட்டிசன்கள் கொண்டாடி வருகின்றனர்.

ரத்தினவேல் பாண்டியன் தனது மனைவியை எம்எல்ஏ வாக்கி அழகு பார்த்தார் என்று அவரது பேரவை சார்பாக தெரிவித்து கொள்கிறோம் என்றும் நெட்டிசன்கள் தெரிவித்து வருவதை அடுத்து இன்னும் நெட்டிசன்கள் என்ன செய்ய காத்திருக்கின்றனர் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.