close
Choose your channels
enpt
nd2

'தளபதி 64' நாயகிக்கு கிடைத்த பாலிட் வாய்ப்பு!

Wednesday, December 11, 2019 • தமிழ் Comments

தளபதி விஜய் நடித்து வரும் ’தளபதி 64’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பில் கர்நாடக மாநிலத்தில் உள்ள ஷிமோகா சிறைச்சாலையில் விரைவில் தொடங்க உள்ளது.

இந்த நிலையில் இந்த படத்தில் நாயகியாக நடித்து வரும் மாளவிகா மோகனன் தற்போது பாலிவுட் நடிகர் ரன்வீர் கபூர் நடிக்கும் ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

பாலிவுட் சூப்பர் ஸ்டார் ரன்வீர் கபூர் மற்றும் மாளவிகா மோகனன் நடித்த விளம்பர படம் ஒன்று படப்பிடிப்பின் சமீபத்தில் நடைபெற்றது. இந்த படப்பிடிப்பின்போது ரன்வீர் கபூர் மற்றும் மாளவிகா மோகனன் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் தற்போது இணையதளங்கள் மற்றும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. 

ஏற்கனவே ’பியாண்ட் த கிளவுட்ஸ்’ என்ற பாலிவுட் படத்தில் மாளவிகா மோகனன் நடித்துள்ளார் என்பதும் என்பது குறிப்பிடத்தக்கது. தளபதி 64 படம் ரிலீஸ் ஆனபின்னர் அவருக்கு தென்னிந்திய மொழிகளிலும் பாலிவுட்டிலும் அதிக வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Get Breaking News Alerts From IndiaGlitz