close
Choose your channels

'மாஸ்டர்' படத்திற்காக மாளவிகா எடுத்த பயிற்சி!

Saturday, January 18, 2020 • தமிழ் Comments

பொதுவாக மாஸ் நடிகர்களின் படங்களில் நாயகிக்கு அதிக வேலை இருக்காது என்றும் பாடல்கள் மட்டும் கிளாமருக்காகவே அவர்கள் பயன்படுத்தப்படுவதாகவும் ஒரு குற்றச்சாட்டு இருந்து வருகிறது. 

ஆனால் தளபதி விஜய் நடித்து வரும் ’மாஸ்டர்’ படத்தில் நாயகியாக நடித்து வரும் மாளவிகா மோகனன் விஜய்யுடன் காதல் டூயட் பாடுவது மட்டுமன்றி முக்கிய கேரக்டரில் நடித்து வருவதாகவும் இதற்காக அவர் ஒரு சில பயிற்சிகள் மேற்கொண்டு இருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது. 

நடிகை மாளவிகா மோகனன் தன்னுடைய கேரக்டருக்காக ’parkour’ என்ற கலையை பயிற்சி எடுத்து வருவதாகவும் இந்த பயிற்சியின் மூலம் அவர் ஆக்ஷன் காட்சிகளில் டூப் இன்றி நடித்து இருப்பதாகவும் குறிப்பாக விஜய் சேதுபதியுடன் மாளவிகா மோகனன் மோதும் காட்சி ஆக்சன் ரசிகர்களுக்கு விருந்தாக இருக்கும் என்று கூறப்படுகிறது. 

ஏற்கனவே விஜய், விஜய் சேதுபதி மோதும் கிளைமாக்ஸ் காட்சி விறுவிறுப்பாக இருக்கும் என்று கூறப்படும் நிலையில் விஜய்சேதுபதி மாளவிகா போதும் காட்சியும் படத்தின் ஹைலைட்டாக இருக்கும் என்று கூறப்படுவதால் மாஸ்டர் படத்தின் எதிர்பார்ப்பு அதிகரித்து கொண்டே வருகிறது.

Get Breaking News Alerts From IndiaGlitz