close
Choose your channels
LoveToday
CWK

நீலக்கடலும் வெண்மேகமும்: மாளவிகா மோகன் பதிவு செய்த அட்டகாசமான புகைப்படங்கள்!

Friday, September 17, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தளபதி விஜய் நடித்த ’மாஸ்டர்’ படத்தின் மூலம் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்த நடிகை மாளவிகா மோகனன், அடுத்ததாக தனுஷ் நடித்து முடித்துள்ள ’மாறன்’ என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் விரைவில் ரிலீசாக உள்ளது.

இந்த நிலையில் தற்போது மாளவிகா மோகனன் பாலிவுட்டில் ரவி உதயவார் இயக்கத்தில் சித்தார்த் சதுர்வேதி நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ஒன்றில் நாயகியாக நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது போர்ச்சுக்கல் நாட்டில் நடந்து வரும் நிலையில் அந்நாட்டின் அழகிய கடல் மற்றும் வெண்மேகம், மலைப் பகுதி ஆகியவற்றை புகைப்படங்களாக எடுத்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மாளவிகா பதிவு செய்துள்ளார்.

வெண்மேகமும் நீலக் கடலும் இணையும் இடத்தில் மாளவிகா மோகனனின் கை இருப்பது போன்ற உள்ள புகைப்படம் அசத்தலாக உள்ளது. இந்த புகைப்படங்களுக்கும் மாளவிகா மோகனனின் காஸ்ட்யூம்க்கும் ரசிகர்களின் லைக்ஸ் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.