close
Choose your channels
Por
Joshwa

'என்னால் இதுக்கு மேல் முடியாது.. 'தங்கலான்' நடிகை மாளவிகா மோகனனின் வீடியோ!

Wednesday, December 7, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பா ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் உருவாகிவரும் ‘தங்கலான்’ என்ற படத்தில் நாயகியாக நடித்து வரும் நடிகை மாளவிகா மோகனன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சூப்பர் வீடியோ ஒன்றை வெளியிட்டு என்னால் இதற்கு மேல் முடியாது என்று பதிவு செய்துள்ளார்.

தளபதி விஜய் நடித்த ’மாஸ்டர்’ திரைப்படத்தில் நாயகியாக நடித்த மாளவிகா மோகனன் அதன்பின் தனுஷ் நடித்த ’மாறன்’ என்ற திரைப்படத்தில் நடித்தார். இந்த நிலையில் தற்போது விக்ரம் நடிப்பில் பா ரஞ்சித் இயக்கத்தில் உருவாகிவரும் ‘தங்கலான்’ என்ற படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார் என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் நடிகை மாளவிகா மோகனன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சிலம்பம் பயிற்சி செய்யும் வீடியோ ஒன்றை பகிர்ந்து அதில் கூறியிருப்பதாவது: ’சிலம்பம் என்ற அற்புதமான கலையில் ஒரு குழந்தையாக நான் அடியெடுத்து வைத்துள்ளேன். இந்த பயணத்தை மிகவும் அற்புதமாகவும் சுவாரசியமாகவும் மாற்றிய எனது பயிற்சியாளருக்கு நன்றி . இது என்னுடைய வாழ்க்கையின் பெரும் பகுதியை மாற்றப் போகிறது. அந்த மாற்றத்தை காண என்னால் இதுக்கு மேலும் காத்திருக்க முடியாது’ என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அவர் சிலம்பம் பயிற்சி செய்யும் வீடியோவையும் பதிவு செய்துள்ள நிலையில் அந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.