close
Choose your channels
naaney_varuven
Ponniyin_Selvan

என் முன்னால் சிக்கன் பிரியாணி இருந்தால் இப்படித்தான் பார்ப்பேன்: கிளாமர் பார்வையில் மாளவிகா மோகனன்

Thursday, July 15, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கிளாமர் உடை மற்றும் பார்வையுடன் போஸ் கொடுத்துள்ள நடிகை மாளவிகா மோகனன், என் முன் சிக்கன் பிரியாணி இருந்தால் இப்படித்தான் பார்ப்பேன் என்று பதிவு செய்துள்ளது வைரலாகி வருகிறது.

இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ’பேட்ட’ என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களின் மனதை கவர்ந்த நடிகை மாளவிகா மோகன், அடுத்த படத்திலேயே தளபதி விஜய்யுடன் ’மாஸ்டர்’ திரைப்படத்தில் நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ’மாஸ்டர்’ படத்தின் வெற்றியால் தற்போது அவர் தனுஷுடன் ஒரு படத்திலும் பாலிவுட்டில் ஒரு ஆக்ஷன் படத்திலும் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இரண்டு முன்னணி நடிகர்களுடன் நடிக்க அவர் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் சமூக வலைதளங்களில் குறிப்பாக இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் மாளவிகா மோகனனுக்கு இரண்டரை மில்லியன் ஃபாலோயர்கள் உள்ளனர் என்பதும் அவர் பதிவு செய்யும் புகைப்படங்கள் வீடியோக்கள் மிகப்பெரிய அளவில் வைரலாகும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சற்றுமுன் கிளாமர் உடை மற்றும் கிளாமர் பார்வையுடன் கூடிய போட்டோஷூட் புகைப்படத்தை பதிவு செய்துள்ள மாளவிகா மோகனன் நிஜவாழ்க்கையில் எனக்கு முன்னால் ஒரு சிக்கன் பிரியாணியை வைக்கும்போது நான் பார்க்கும் பார்வை இதுதான் என்று கேப்ஷனாக பதிவு செய்துள்ளார். இந்த புகைப்படமும் கேப்ஷனும் வைரலாகி வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.