close
Choose your channels
soodhukavvum

திருமண கோலத்தில் மாளவிகா மோகனன்.. கேப்ஷன் தான் ஹைலைட்..!

Tuesday, February 27, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகை மாளவிகா மோகனன் திருமண கோலத்தில் உள்ள புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராமில் பதிவு செய்து அதில் ஒரு அசத்தலான கேப்ஷனை பதிவு செய்துள்ளதை அடுத்து இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

மலையாள நடிகையான மாளவிகா மோகனன் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ’பேட்ட’ என்ற திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். இதனை அடுத்து தளபதி விஜய் நடித்த ’மாஸ்டர்’ தனுஷ் நடித்த ’மாறன்’ போன்ற படங்களில் நடித்துள்ள நிலையில் தற்போது அவர் விக்ரம் நடித்த ’தங்கலான்’ படத்தில் நடித்து முடித்துள்ளார் என்பதும் இந்த படம் விரைவில் வெளியாக உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் அவர் ஒரு தெலுங்கு மற்றும் இந்தி படங்களிலும் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் சமூக வலைதளங்களில் குறிப்பாக இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் மாளவிகா மோகனனுக்கு 4 மில்லியன் ஃபாலோயர்கள் உள்ளனர் என்பதும் அவர் பதிவு செய்யும் கிளாமர் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் மிகப்பெரிய அளவில் வைரல் ஆகும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சற்று முன் மாளவிகா மோகனன் திருமண கோலத்தில் எடுத்த விதவிதமான புகைப்படங்களை பதிவு செய்து ’திருமணம் தான், ஆனால் எனக்கு இல்லை ’ என்று கேப்ஷனாக பதிவு செய்துள்ளார். இதனை அடுத்து அவர் நெருங்கிய உறவினர் அல்லது தோழியின் திருமணத்தில் கலந்து கொண்டு இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இருப்பினும் அவருக்கு விரைவில் திருமணம் நடக்க ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment