close
Choose your channels

மகத்-யாஷிகா நடிக்கும் படத்தின் டைட்டில் அறிவிப்பு!

Thursday, August 22, 2019 • தமிழ் Comments

பிக்பாஸ் இரண்டாம் சீசன் போட்டியாளர்களான மகத் மற்றும் யாஷிகா ஆகிய இருவரும் இணைந்து ஒரு படத்தில் நடித்து வருகின்றனர் என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கியது என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் இந்த படத்தின் டைட்டிலை பிரபல இசையமைப்பாளர் அனிருத் தனது சமூக வலைத்தள பக்கத்தில் அறிவித்துள்ளார். இந்த படத்திற்கு 'இவன் தான் உத்தமன்' என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. மேலும் டைட்டிலுடன் கூடிய ஃபர்ஸ்ட்லுக் போஸ்டரும் வெளியாகியுள்ளது. இந்த ஃபர்ஸ்ட்லுக்கில் மகத், யாஷிகா உள்ளனர். இந்த படத்தின் கதை ஒரு உண்மை சம்பவத்தை தழுவி தயாரிக்கப்படுவதாக ஃபர்ஸ்ட்லுக் போஸ்டரில் குறிப்பிடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Magven இயக்கி வரும் இந்த படத்திற்கு எஸ்.எஸ்.தமன் இசையமைக்கின்றார். இந்த படத்தை ஆர்வி பரதன் என்பவர் தயாரிக்கின்றார். பிக்பாஸ் நிகழ்ச்சியின்போது மகத், யாஷிகா காதலிப்பதாக வதந்தி கிளம்பிய நிலையில் அதே கெமிஸ்ட்ரி இந்த படத்திலும் இருக்குமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Get Breaking News Alerts From IndiaGlitz