close
Choose your channels

'தளபதி 65' படத்தில் விஜய்சேதுபதி பட நாயகி?

Saturday, June 6, 2020 • தமிழ் Comments

தளபதி விஜய் நடித்த ’மாஸ்டர்’ திரைப்படம் ரிலீசுக்கு தயாராக இருக்கும் நிலையில் ஊரடங்கு உத்தரவு மற்றும் கொரோனா பரபரப்பு முடிந்த பின்னர் பிரம்மாண்டமாக திரையரங்குகளில் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தளபதி விஜய் நடிக்கவிருக்கும் அடுத்த திரைப்படமான ’தளபதி 65’ படம் குறித்த செய்திகள் அவ்வப்போது இணையதளங்களில் வெளியாகிக் கொண்டிருக்கிறது. இந்த படத்தை ஏஆர் முருகதாஸ் இயக்க இருப்பதாகவும், சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க இருப்பதாகவும், தமன் இசையமைக்க இருப்பதாகவும் ஏற்கனவே வெளிவந்த செய்திகளை பார்த்தோம்.

இந்த நிலையில் இந்த படத்தில் தற்போது விஜய்சேதுபதி படத்தில் நாயகியாக நடித்த நடிகை ஒருவர் முக்கிய வேடத்தில் நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. விஜய் சேதுபதி நடித்த ’காதலும் கடந்து போகும்’ ’கவண்’ மற்றும் ‘ஜூங்கா’ ஆகிய படங்களில் நடித்த நடிகை மடோனா செபாஸ்டியன் தளபதி விஜய் நடிக்கவிருக்கும் அடுத்த படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

மேலும் தளபதி விஜய்யின் 65 வது படம் குறித்த அறிவிப்பு அவருடைய பிறந்த நாளான ஜூன் 22ஆம் தேதி வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுவதால் அந்த அறிவிப்பில் மடோனா செபாஸ்டியன் பெயரும் வெளியாகுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
 

Get Breaking News Alerts From IndiaGlitz