close
Choose your channels
Viruman
Laal

சூர்யாவின் இந்த 2 சூப்பர் ஹிட் படங்களும் எனக்கு வந்த வாய்ப்புகள்: மாதவன்

Sunday, July 3, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூர்யாவின் இரண்டு சூப்பர் ஹிட் படங்களிலும் நடிக்கும் வாய்ப்பு முதலில் எனக்கு தான் வந்தது என நடிகர் மாதவன் கூறியிருப்பது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

நடிகர் மாதவன் நடித்த ’ராக்கெட்டரி’ திரைப்படம் திரையரங்குகளில் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது என்பதும் இந்த படத்திற்கு ஒட்டுமொத்த ஊடகங்களும் பாசிட்டிவ் விமர்சனங்களை கொடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் நேற்று இன்ஸ்டாகிராமில் சூர்யா மற்றும் மாதவன் உரையாடினர். அப்போது சில அபூர்வ தகவல்கள் மாதவன் கூறினர். அவற்றி ஒன்று, ‘சூர்யா நடித்த ’கஜினி’ மற்றும் ’காக்க காக்க’ ஆகிய இரண்டு திரைப்படங்களிலும் நடிக்கும் வாய்ப்பு தனக்கு தான் முதலில் வந்ததாகவும் ஆனால் அதன் பின்னர் அந்த படங்களில் சூர்யா நடித்ததாகவும் தெரிவித்த மாதவன், சூர்யா இரண்டு படங்களிலுமே மிகச்சிறப்பாக நடித்து இருந்தார்’ என்று பாராட்டு தெரிவித்தார்

நடிகர் சூர்யா மாதவனின் ’ராக்கெட்டரி’ படம் குறித்து கூறிய போது ’இந்தியாவில் உள்ள சினிமா ரசிகர்கள் மட்டுமின்றி ஒட்டுமொத்த இந்தியர்களும் பார்க்க வேண்டிய படம் ’ராக்கெட்டரி’ என்று கூறினார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.