close
Choose your channels
Por
Joshwa

'எமனே தவறு செய்தாலும் தட்டி கேட்பேன்: 'மாவீரன்' படத்தின் மாஸ் டிரைலர்..!

Sunday, July 2, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சிவகார்த்திகேயன் நடித்த ‘மாவீரன்’ திரைப்படம் வரும் 14ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் டிரைலர் வெளியாகி இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

இரண்டு நிமிடத்திற்கு மேல் இருக்கும் இந்த ட்ரெய்லரில் அப்பாவியாக இருக்கும் சிவகார்த்திகேயன் திடீரென மேலே பார்த்தால் அவருக்கு ஒரு சக்தி வந்து அசுர பலம் வந்துவிடுகிறது என்பதும் அதன் மூலம் அவர் எதிரிகளை பந்தாடுகிறார் என்பதும் தெரிய வருகிறது.

இந்த சக்தி அவருக்கு எப்படி வருகிறது என்பது தெரியாமல் உள்ள நிலையில் ‘கதையில் வருகிறது’ என்று சிவகார்த்திகேயன் அப்பாவியாக கூறுகிறார். ஒரு கட்டத்தில் அந்த நகரின் அரசியல்வாதி மிஷ்கினுக்கும் சிவகார்த்திகேயனுக்கும் ஏற்படும் பிரச்சனையில் இதே கதை ஏற்படுவதால் மிஷ்கின் ஆத்திரமடைகிறார். இதனால் ஏற்பட்ட விளைவு என்ன என்பது தான் இந்த படத்தின் கதை..

’ஹீரோ’ படத்தை ஞாபகப்படுத்தும் கேரக்டர் சிவகார்த்திகேயனுக்கு கிடைத்துள்ள நிலையில் அதனை அவர் சரியாக பயன்படுத்தி உள்ளார். அதேபோல் மிஷ்கின் வில்லன் நடிப்பில் மிரட்டியுள்ளார். அதிதி சங்கர், சரிதா உட்பட பலர் நடித்துள்ள இந்த படத்தை ’மண்டேலா’ என்ற தேசிய விருது பெற்ற படத்தை இயக்கிய மடோன் அஸ்வின் இயக்கி உள்ளார்

பரத் சங்கரின் இசை ஒரு ஆக்சன் படத்திற்கு மிகப் பொருத்தமான வகையில் உள்ளது. மொத்தத்தில் சிவகார்த்திகேயனின் இன்னொரு வெற்றி படமாக ‘மாவீரன்’ அமையும் என்பதில் எந்த விதமான சந்தேகமும் இல்லை.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.