close
Choose your channels

சிம்புவின் 'மாநாடு' ஃபர்ஸ்ட் சிங்கிள்: 'மெஹரிஸ்ல்லா' பாடல் வைரல்!

Monday, June 21, 2021 • தமிழ் Comments

சிம்பு, கல்யாணி பிரியதர்ஷன் நடிப்பில் இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் யுவன் சங்கர் ராஜா இசையில் உருவாகி வரும் திரைப்படம் ‘மாநாடு’. இந்த படத்தின் பெரும்பாலான படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் இன்று இந்த படத்தின் ‘மெஹரிஸ்ல்லா’ என்ற பாடல் வெளியாகும் என ஏற்கனவே யுவன் சங்கர் ராஜா அறிவித்திருந்தார்

யுவன் சங்கர் ராஜாவின் ‘யூ1’ என்ற நிறுவனம்தான் இந்த படத்தின் பாடல்கள் உரிமையை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில்தான் இந்த பாடல் சற்றுமுன் வெளியாகி உள்ள நிலையில் இந்த பாடல் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

‘மெஹரிஸ்ல்லா’ என்று தொடங்கும் இந்த பாடலை யுவன்ஷங்கர் ராஜா கம்போஸ் செய்ய, யுவன்சங்கர் ராஜா மற்றும் பவதாரணி ஆகியோர் பாடியுள்ளனர். இந்த பாடலை மதன் கார்க்கி எழுதியுள்ளார். இந்த பாடல் அட்டகாசமாக இருப்பதாக சிம்பு ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர் மேலும் இந்த பாடலின் வீடியோவை பார்க்கும்போது இஸ்லாமிய குடும்பத்தின் திருமணம் ஒன்றின் பின்னணியில் அமைக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. இந்த பாடல் பட்டி தொட்டிகளிலும் ஹிட்டாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Get Breaking News Alerts From IndiaGlitz