close
Choose your channels

இந்த வருஷம் நாம தெறிக்க வுடறோம்: பிரபல இயக்குனரின் பரபரப்பு டுவீட்

Wednesday, January 22, 2020 • தமிழ் Comments

கோலிவுட் திரையுலகில் 'சிவா மனசுல சக்தி, 'பாஸ் என்ற பாஸ்கரன்' உள்பட ஒரு சில வெற்றிப் படங்களை இயக்கியவர் எம் ராஜேஷ். இவர் இயக்கிய படங்களில் ஹீரோவுக்கு இணையாக சந்தானம் கேரக்டர் உருவாக்கப்பட்டிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ராஜேஷ் சமீபத்தில் இயக்கிய ஒருசில படங்கள் தோல்வியடைந்தன. அதற்கு சந்தானம் நடிக்காததும் ஒரு காரணம் என கூறப்பட்டது. இந்த நிலையில் சந்தானம் ஹீரோவாக நடிக்கும் ஒரு படத்தை எம் ராஜேஷ் இயக்க இருப்பதாக செய்திகள் வெளிவந்தன இந்த செய்தி உறுதி செய்யப்படாமல் இருந்த நிலையில் நேற்று சந்தானம் பிறந்தநாளை அடுத்து எம் ராஜேஷ் தனது சமூக வலைப்பக்கத்தில் ஒரு டுவீட்டை பதிவு செய்துள்ளார்.

அந்தக் டுவீட்டில் அவர் கூறியிருப்பதாவது: SMS time-ல இருந்து இப்போ Whatsapp time வரைக்கும் பத்து வருஷமா Real ”நண்பேன்டா ”-வா எப்பவும் கூட இருக்கும் என்னோட “பார்த்தா” சந்தானம் Sir- க்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள். Happy Birthday Guruji... இந்த வருஷம் நாம தெறிக்க வுடறோம்.. மகிழ்ந்திரு என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்த டுவிட்டை அடுத்து சந்தானம் மற்றும் ராஜேஷ் இந்த ஆண்டு இணைவது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. இதுகுறித்த அறிவிப்பு எப்போது வேண்டுமானாலும் வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Get Breaking News Alerts From IndiaGlitz