close
Choose your channels

அஜித்துக்காக வேற லெவல் புரமோஷனில் இறங்கிய லைகா.. செம வீடியோ வைரல்

Monday, December 26, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

அஜித் நடித்த ‘துணிவு’ திரைப்படம் வரும் பொங்கல் தினத்தில் வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன என்பது தெரிந்ததே.

இந்த நிலையில் இந்த படத்தின் வெளிநாட்டு உரிமையை வாங்கியுள்ள லைகா நிறுவனம் இந்த படத்தை வேற லெவலில் புரமோஷன் செய்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கோலிவுட் திரையுலகில் முதல் முறையாக துபாயில் ஹெலிகாப்டரில் இருந்து பாராசூட் மூலம் ஸ்கை டைவிங் செய்து அஜித்தின் ‘துணிவு’ போஸ்டர் வானத்தில் பறக்க விடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்த வீடியோவை லைகா நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட நிலையில் இந்த வீடியோ வைரலாகி வருகிறது.

மேலும் டிசம்பர் 31ஆம் தேதி ‘துணிவு’ படத்தின் முக்கிய அறிவிப்பை வெளியிட உள்ளதாக லைகா தெரிவித்துள்ளது. மேலும் அந்த தினத்தை ‘துணிவு’ தினம் என்றும் அழைக்கலாம் என்றும் லைகா கூறியுள்ளதை அடுத்து பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Related Videos