close
Choose your channels
Viruman
Laal

லைகாவின் அடுத்த படத்திற்கு 'யூ' சான்றிதழ்: ரிலீஸ் எப்போது?

Thursday, June 30, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழ் திரையுலகின் முன்னணி தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான லைகா நிறுவனம் தயாரித்த அடுத்த திரைப்படத்திற்கு சென்சாரில் சான்றிதழ் ‘யூ’ கிடைத்துள்ள நிலையில் அந்தப் படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

லைகா நிறுவனம் தயாரிப்பில் சமீபத்தில் வெளியான சிவகார்த்திகேயனின் ‘டான்’ திரைப்படம் மிகப் பெரிய வெற்றி பெற்றது என்பதும் இந்த படம் 100 கோடி ரூபாய் வசூலை அள்ளிக் கொடுத்தது என்பது குறிப்பிடத்தக்கது. இதனை அடுத்து செப்டம்பர் 30ஆம் தேதி லைகா நிறுவனத்தின் பிரம்மாண்டமாக தயாரிப்பான ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படம் வெளியாக உள்ளது.

இந்த நிலையில் லைகா நிறுவனத்தின் சுபாஷ்கரன் தயாரித்த ‘பன்னிகுட்டி’ படம் சென்சாரில் ‘யூ’ சான்றிதழ் பெற்றுள்ளதாகவும் இந்த படம் ஜூலை 8ஆம் தேதி ரிலீசாக இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து இந்த படத்தின் புரமோஷன் பணிகளை தொடங்க படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.

யோகி பாபு மற்றும் கருணாகரன் முக்கிய வேடத்தில் நடித்துள்ள இந்த படத்தை அனுசரன் என்பவர் இயக்கியுள்ளார். ஏற்கனவே யோகி பாபு முக்கிய வேடத்தில் நடித்த ஒரு சில திரைப்படங்கள் நல்ல வெற்றியை பெற்றுள்ள நிலையில் இந்த படமும் அதே போல் வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.