close
Choose your channels
DJ
DJ

அஜித் படத்தின் முக்கிய அறிவிப்பை வெளியிட்ட லைகா: ரசிகர்கள் செம குஷி!

Saturday, November 19, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

அஜித் படத்தின் முக்கிய அறிவிப்பை லைகா நிறுவனம் அதிகாரப்பூர்வமாக தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள நிலையில் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

அஜித் நடிக்கவிருக்கும் அடுத்த திரைப்படமான ’ஏகே 62’ திரைப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்க உள்ளது என்பதும் இந்த படத்தை விக்னேஷ் சிவன் இயக்க உள்ளார் என்பதும் அனிருத் இசையமைக்க உள்ளார் என்பதும் தெரிந்ததே. இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் அஜீத் நடித்து முடித்துள்ள ’துணிவு’ திரைப்படம் வரும் பொங்கல் திருநாளில் உலகம் முழுவதும் பிரமாண்டமாக ரிலீஸ் ஆக இருக்கும் நிலையில் இந்த படத்தின் வெளிநாட்டு உரிமையை லைகா நிறுவனம் பெற்று இருப்பதாக வெளிவந்த செய்தியை ஏற்கனவே பார்த்தோம்.

இந்த நிலையில் சற்றுமுன் லைகா தனது ட்விட்டர் பக்கத்தில் ’துணிவு’ படத்தின் வெளிநாட்டு உரிமையை பெற்றுள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. அஜித் படத்துடன் இணைந்தது மிகவும் மகிழ்ச்சி என்று லைகா நிறுவனம் அந்த டுவீட்டில் தெரிவித்துள்ளது.

இதனை அடுத்து ’துணிவு’ படத்தை வெளிநாடுகளில் லைகா நிறுவனம் அதிக திரையரங்குகளில் வெளியிட திட்டமிட்டு உள்ளதாகவும் இப்போதே திரையரங்குகளை புக் செய்யும் பணியை தொடங்கி விட்டதாகவும் கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.