close
Choose your channels
Veeran
TheeraKaadhal

'துணிவு' டிரைலர் தினம்.. அஜித்தை அசத்தப்போகும் லைகா!

Saturday, December 31, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

அஜித் நடித்த 'துணிவு’ திரைப்படம் வரும் பொங்கல் தினத்தில் வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் டிரைலர் இன்று இரவு ஏழு மணிக்கு வெளியாகும் என ஏற்கனவே படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர் என்பதை பார்த்தோம்.

இந்த நிலையில் ஒரு திரைப்படத்தின் டிரைலர் வெளியாகிறது என்றால் சமூக வலைதளங்களில் மட்டும் பரபரப்பாக இருக்கும் என்ற நிலையில் அஜித்தை அசத்தும் வகையில் 'துணிவு’ படத்தின் வெளிநாட்டு உரிமையை பெற்றுள்ள லைகா நிறுவனம் சில சிறப்பு ஏற்பாடுகளை ட்ரெய்லர் தினத்தில் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

முதல்கட்டமாக 'துணிவு’ படத்தின் டிரைலர் உலகின் மிக உயர்ந்த துபாயில் உள்ள புர்ஜ் கலீபா கட்டிடத்தில் திரையிட நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் அதேபோல் நியூயார்க் டைம்ஸ் ஸ்கொயர் கட்டிடத்திலும் இந்த படத்தின் டிரைலர் திரையிடப்படும் என்றும் கூறப்படுகிறது.

அது மட்டுமின்றி இன்னும் சில சர்ப்ரைஸ் லைகா நிறுவனம் வைத்துள்ளது என்றும் இவை அஜித்துக்கும் அவரது ரசிகர்களுக்கு மிகப்பெரிய அளவில் ஆச்சரியத்தை ஏற்படுத்தும் என்றும் கூறப்படுகிறது. மொத்தத்தில் லைகா நிறுவனத்தின் 'துணிவு’ டிரைலர் தினத்தை மிகவும் பிரமாண்டமாக கொண்டாட திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.

அஜித், மஞ்சுவாரியர் நடிப்பில் வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் ஜிப்ரான் இசையில் உருவாகியுள்ள 'துணிவு’ படம் ஜனவரி 12ஆம் தேதி வெளியாக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.