close
Choose your channels

லைகா-யோகிபாபு படத்தின் ரிலீஸ் உரிமையை பெற்ற பிரபல நிறுவனம்!

Saturday, November 27, 2021 • தமிழ் Comments

லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் யோகி பாபு நடித்திருக்கும் “பன்னிக்குட்டி” திரைப்படத்தை, 11:11 புரடொக்சன்ஸ் என்ற நிறுவனம் தமிழ்நாடு, கர்நாடகா மற்றும் கேரளாவில் வெளியிடுகிறது!

11:11 புரடொக்சன்ஸ் தயாரிப்பாளர் டாக்டர் பிரபு திலக் அவர்கள், லைகா புரடொக்சன்ஸ் தயாரிப்பாளர் சுபாஸ்கரன் அவர்களுடன் இணைந்து, யோகிபாபு நடிப்பில் ஆவிகளை கொண்டு உருவாகியுள்ள காமெடி படமான “பன்னிக்குட்டி” படத்தினை தமிழ்நாடு, கேரளா மற்றும் கேரளாவில் வெளியிடுகின்றார்.

11:11 புரடொக்சன்ஸ் நிறுவன இயக்குநர் மற்றும் இணை தயாரிப்பாளர் ஷ்ருதி திலக் இது குறித்து கூறியதாவது: எங்கள் தயாரிப்பு நிறுவனம் 11:11 புரடொக்சன்ஸ் “பன்னிக்குட்டி” படத்தின் தமிழகம் கேரளா மற்றும் கர்நாடகா வெளியீட்டிற்கு, லைகா புரடொக்சன்ஸ் உடன் இணைவதில் மிகுந்த பெருமை கொள்கிறோம். ஒரு நிறுவனமாக ரசிகர்களின் ஏக்கங்களை நிறைவு செய்யும் தரமான பொழுது போக்கு படைப்புகளை அளிக்கும் நோக்கில் முழுக்க முழுக்க காமெடி சரவெடியாக பன்னி குட்டி திரைப்படத்தை திரைப்பட ரசிகர்களுக்கு அளிப்பது மகிழ்ச்சி. குடும்ப பொழுதுபோக்கு திரைப்படமாக திரையரங்கு சிரிப்பு மழையில் நனையும் எனபதை உறுதியாக நம்புகிறோம். 11:11 புரடொக்சன்ஸ் எப்போதும் திரை ரசிகர்கள் இதயம் கனிந்து ரசித்து மகிழும் திரைப்படத்தை வழங்கி வருதில் மிகுந்த பெருமை கொள்கிறது. அந்த வரிசையில் பன்னி குட்டி திரைப்படமும் ரசிகர்களுக்கு ஒரு சிறப்பான அனுபவமாக இருக்கும்.

“பன்னிக்குட்டி” திரைப்படத்தில் யோகி பாபு, கருணாகரன், திண்டுக்கல் லியோனி, சிங்கம் புலி, விஜய் டிவி புகழ் ராமர், தங்க துரை போன்ற முன்னணி நகைச்சுவை நடிகர்கள் மற்றும் இன்னும் பல முன்னணி பிரபலங்கள் இணைந்து நடித்துள்ளனர். இப்படத்திற்கு கே இசையமைத்துள்ளார் மற்றும் சதீஷ் முருகன் ஒளிப்பதிவு செய்துள்ளார். ரவி முருகையா கதை எழுதியுள்ளார், மேலும் இயக்குனர் அனுசரனுடன் இணைந்து திரைக்கதையும் எழுதியுள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Get Breaking News Alerts From IndiaGlitz