close
Choose your channels
Don
Nenjukku Needhi

மறுபடியும் வருவேன், நான் கொடுக்குறதுதான் ஜட்ஜ்மெண்ட்: 'ப்ரெண்ட்ஷிப் டிரைலர்

Monday, September 6, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்களில் ஒருவரான லாஸ்லியா நடித்த முதல் திரைப்படமான ‘ப்ரெண்ட்ஷிப்’ திரைப்படத்தின் டிரைலர் சற்றுமுன் வெளியாகி அதன் வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

கல்லூரியில் படிக்கும் மாணவியாக லாஸ்லியா இந்த படத்தில் நடித்துள்ளார். சுதந்திர பறவையாக அவர் தனது நண்பர்களுடன் சுற்றித் திரிந்து கொண்டிருக்கும் போது ஏற்படும் திடீர் பிரச்சினை காரணமாக போலீஸ் கல்லூரியில் நுழைகிறது. அதன் பிறகு ஏற்படும் திடீர் திருப்பங்கள் தான் இந்த படத்தின் கதை என்பது இந்த படத்தின் டிரெய்லரில் இருந்து தெரிய வருகிறது.

இந்த படத்தில் முக்கிய வேடத்தில் பிரபல கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் நடித்துள்ளார். இவர் லாஸ்லியாவுக்கு ஜோடி என்பது இந்த டிரைலரில் இருந்து தெரியவருகிறது. மேலும் ஆக்சன் கிங் அர்ஜுன், சதீஷ் உள்பட பலர் இந்த படத்தில் நடித்துள்ளனர்.

உதயகுமார் இசையமைப்பில், சாந்தகுமார் ஒளிப்பதிவில், தீபக் படத்தொகுப்பில் உருவாகியுள்ள ‘ப்ரெண்ட்ஷிப்’ படத்தை ஜான் பால்ராஜ் மற்றும் ஷாம் சூர்யா ஆகியோர் இயக்கியுள்ளனர். அதிரடி ஆக்ஷன், ‘ப்ரெண்ட்ஷிப்’ மற்றும் ரொமான்ஸ் என அனைத்து அம்சங்களும் பொருந்திய இந்த படம் நிச்சயம் வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.