ஒரு தடவை பயம் போயிட்டா, திரும்ப வரவே வராது: 'ப்ரெண்ட்ஷிப்' டீசர்
பிக்பாஸ் புகழ் லாஸ்லியா, பிரபல கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங், ஆக்சன் கிங் அர்ஜுன் நடிப்பில் உருவான ‘ப்ரெண்ட்ஷிப்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து விரைவில் ரிலீசாக உள்ளது. ஜான் பால்ராஜ் மற்றும் ஷ்யாம் சூர்யா ஆகியோர் இயக்கியுள்ள இந்த திரைப்படத்திற்கு உதயகுமார் என்பவர் இசையமைத்துள்ளார். இந்த படத்தின் டீசர் இன்று வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில் சற்று முன் வெளியாகியுள்ளது
’பயம் என்பது ஒரு உணர்வு, அது ஒரு தடவை போய் விட்டால் திரும்ப வரவே வராது’ என்ற பஞ்ச் டயலாக்குடன் ஆரம்பமாகும் இந்த படத்தின் டீசர் விறுவிறுப்பாக உள்ளது. ஹர்பஜன்சிங் எதிர்பாராத வகையில் அதிரடி ஆக்ஷன் காட்சிகளுடன் நடித்துள்ளார். அழகான லாஸ்லியா, ஆக்சன் கிங் அர்ஜுனின் நடிப்பு, சதீஷின் காமெடி ஆகியவையும் ரசிக்கும் வகையில் உள்ளது என்பதால் இந்த படத்தின் எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது
உதயகுமாரின் பின்னணி இசை, சாந்தகுமாரின் கலர்புல் ஒளிப்பதிவு, தீபக் துவாரகாந்தின் கச்சிதமான எடிட்டிங் ஆகியவை இந்த படத்தின் பாசிட்டிவ்கள் என்பது குறிப்பிடத்தக்கது