close
Choose your channels

2.5 ஏக்கர், ரூ.3.5 கோடி சென்னையில் தயாராகும் லண்டன் ஜெயில் செட்: எந்த படத்திற்கு தெரியுமா?

Saturday, October 29, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபல இயக்குனர் ஒருவரின் படத்திற்காக லண்டன் சிறை போன்ற செட் 2.5 ஏக்கரில் ரூ.3.5 கோடி செலவில் உருவாக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

தமிழ் திரையுலகின் பிரபல இயக்குனர்களில் ஒருவர் ஏ.எல்.விஜய் என்பதும் தற்போது அவர் ’அச்சம் என்பது இல்லையே’ என்ற படத்தை இயக்கி வருகிறார் என்பதும் தெரிந்ததே.

அருண் விஜய் நாயகனாக நடிக்கும் இந்தப் படத்தில் எமி ஜாக்சன் நாயகியாக நடித்து வருகிறார் என்பதும், நிமிஷா விஜயன் இன்னொரு முக்கிய கேரக்டரில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு நடந்து முடிந்துள்ள நிலையில் தற்போது அடுத்தகட்ட படப்பிடிப்பிற்காக சென்னையில் சுமார் ரூ.3.5 கோடி மதிப்பில் இரண்டரை ஏக்கர் நிலத்தில் லண்டனில் உள்ள சிறை போன்ற செட் அமைக்கப்பட்டு வருகிறது. இந்த செட்டில் சில முக்கிய காட்சிகள் மற்றும் அதிரடி ஸ்டண்ட் காட்சிகள் படமாக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

இந்த படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பின்போது அருண்விஜய்க்கு காயமேற்பட்ட நிலையில் தற்போது முழுவதுமாக குணமாகி அடுத்தகட்ட படப்பிடிப்பிற்கு தயாராக இருப்பதாக கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.