close
Choose your channels
naaney_varuven
Ponniyin_Selvan
Buffoonn

ஆரம்பிக்காங்கலா? கமலுடன் 'விக்ரம்' படத்திற்கு தயாரான லோகேஷ்!

Wednesday, April 7, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கமலஹாசன் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாக இருக்கும் ‘விக்ரம்’ திரைப்படத்தின் டிரைலர் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் வெளியானது என்பதை ஏற்கனவே பார்த்தோம். இந்த டிரைலர் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக தேர்தல் பணியில் பிசியாக இருந்த கமல்ஹாசன், நேற்றுடன் தேர்தல் பணிகள் முடிந்துவிட்டதால் தற்போது அவரும் ‘விக்ரம்’ படத்திற்கு தயாராகிவிட்டார்.

அதேபோல் சமீபத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த லோகேஷ் கனகராஜ் தற்போது குணமாகி வீடு திரும்பி விட்டதால் அவர் விரைவில் ‘விக்ரம்’ படத்தை தொடங்குவார் என்று எதிர்பார்க்கப்பட்டது

இந்த நிலையில் சற்று முன் லோகேஷ் கனகராஜ் தனது சமூக வலைதளப் பக்கத்தில் கமல்ஹாசனுடன் இணைந்து எடுத்த புகைப்படத்தை பதிவு செய்து ’ஆரம்பிக்கலாமா’ என்று பதிவு செய்துள்ளார். இதனை அடுத்து இந்த படத்தின் படப்பிடிப்பு மிக விரைவில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.