close
Choose your channels
Por
Joshwa

லோகேஷ் கனகராஜ் தயாரிக்கும் முதல் படத்தின் ஹீரோ இவர்தான்: அதிரடி அறிவிப்பு..!

Tuesday, November 28, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபல இயக்குனர் லோகேஷ் கனகராஜ், ஜி ஸ்குவாட் என்ற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி இருப்பதாக சமீபத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது இந்நிறுவனத்தின் முதல் படம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

ரீல்குட் பிலிம்ஸ் என்ற நிறுவனம் தயாரிக்கும் முதல் படத்தை லோகேஷ் கனகராஜ் அவர்களின் ஜி ஸ்குவாட் நிறுவனம் வெளியிட போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த படத்தின் நாயகனாக ’உறியடி’ விஜயகுமார் நடிக்க இருப்பதாகவும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் நாளை மாலை 6 மணிக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அப்பாஸ் இயக்கத்தில், கோவிந்த் வசந்தா இசையில், லியோன் பிரிட்டோ ஒளிப்பதிவில் இந்த படம் உருவாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படம் குறித்த அறிவிப்பு போஸ்டர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.