close
Choose your channels

சிறப்பு தோற்றத்தில் நடிக்கின்றாரா லோகேஷ் கனகராஜ்: யாருடைய படத்தில்?

Wednesday, November 9, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூர்யா உள்பட ஒரு சில பிரபலங்களை தனது படங்களில் சிறப்பு தோற்றத்தில் நடிக்க வைத்த இயக்குனர் லோகேஷ் கனகராஜ் ஒரு திரைப்படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளன.

தமிழ் திரையுலகில் காமெடி நடிகராக என்ட்ரி ஆகி அதன் பின் முக்கிய நடிகர் மற்றும் இயக்குனராக அவதாரம் எடுத்தவர் ஆர்ஜே பாலாஜி என்பது தெரிந்ததே. இவரது இயக்கத்தில் வெளியான ’எல்கேஜி’ ’மூக்குத்தி அம்மன்’ மற்றும் ’வீட்ல விசேஷம்’ ஆகிய மூன்று திரைப்படங்களும் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது.

இந்த நிலையில் ஆர்ஜே பாலாஜி நடித்து வரும் படத்தின் பெயர் ‘சிங்கப்பூர் சலூன்’ என்பதும் இந்த படத்தை ’இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’ படத்தை இயக்கிய கோகுல் இயக்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆர்ஜே பாலாஜி ஜோடியாக ஷிவானி ராஜசேகர் நடித்து வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த செப்டம்பர் மாதம் தொடங்கி தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தை அடுத்த ஆண்டு வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.

இந்த நிலையில் இந்த படத்தில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் சிறப்பு தோற்றத்தில் நடிக்க இருப்பதாகவும் அவர் இயக்குனராகவே இந்த படத்தில் நடிக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. வேல்ஸ் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
Login to post comment
Cancel
Comment