close
Choose your channels
Viruman
Laal

அஞ்சலியின் அடுத்த படத்தின் அட்டகாசமான டைட்டில்

Monday, May 21, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

விஜய் ஆண்டனியுடன் அஞ்சலி நடித்த 'காளி' திரைப்படம் திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் நிலையில் அவர் தற்போது சமுத்திரக்கனியின் 'நாடோடிகள் 2', விஜய்சேதுபதியுடன் ஒரு படம், 'கீதாஞ்சலி 2' ஆகிய படங்களில் நடித்து வருகிறார். மேலும் ரஜினி-கார்த்திக் சுப்புராஜ் படத்திலும் அவர் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் அஞ்சலி நடிக்கும் அடுத்த படத்தின் டைட்டிலுடன் கூடிய ஃபர்ஸ்ட்லுக் சற்றுமுன் வெளியாகியுள்ளது. இந்த படத்திற்கு 'லிசா' என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. பிஜி முத்தையா தயாரிப்பில் உருவாகும் இந்த த்ரில் படத்தை ராஜு விஸ்வநாத் இயக்கவுள்ளார்.

இந்தியாவின் முதல் ஸ்டீரீயோஸ்கோப் திகில் படமாக உருவாகவுள்ள இந்த படத்தில் நடிக்கும் மற்ற நட்சத்திரங்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் தேர்வு நடைபெற்று வருவதாகவும், இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.