close
Choose your channels
Don
Nenjukku Needhi

லிங்குசாமி படத்திற்கு இதுதான் முதல்முறை: ஆச்சரியத்தில் திரையுலகினர்!

Thursday, January 27, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபல இயக்குனர் லிங்குசாமி திரைப்படத்தின் ரிலீஸ் உரிமை மிகப்பெரிய தொகைக்கு விற்பனை ஆகியுள்ள நிலையில் திரையுலகினர் ஆச்சரியம் அடைந்துள்ளனர்

பிரபல இயக்குனர் லிங்குசாமி இயக்கத்தில் தெலுங்கு நடிகர் ராம் பொத்தினேனி நடிப்பில் உருவாகி வரும் திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் சமீபத்தில் இந்த படத்தின் பஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி இணையதளங்களில் வைரலானது

இந்த நிலையில் இந்த படத்தின் ஹிந்தி டப்பிங் உரிமை ரூபாய் 16 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் கூறுகின்றன. லிங்குசாமி படத்தின் இந்தி டப்பிங் உரிமை இவ்வளவு இவ்வளவு பெரிய தொகைக்கு விற்கப்படுவது இதுதான் முதல் முறை என தகவல்கள் வெளியாகியுள்ளன

அல்லு அர்ஜுன் நடித்த ’புஷ்பா’ படம் இந்தியில் சூப்பர்ஹிட்டானதை அடுத்து தெலுங்கு படங்களின் டப்பிங் உரிமைக்கு மிகப்பெரிய தொகை கிடைப்பதாக கூறப்படும் நிலையில் இந்த படத்தின் இந்தி டப்பிங் உரிமை ரூ.16 கோடிக்கு விலைபோயுள்ளது.

ராம் பொத்தினேனி ஜோடியாக கீர்த்தி ஷெட்டி நடித்துள்ள இந்த படத்தில் அக்ஷரா கவுடா, ஆதி உள்பட பலர் நடித்து வருகின்றனர் என்பதும் தேவிஸ்ரீ பிரசாத் இந்த படத்துக்கு இசையமைத்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. வித்தியாசமான போலீஸ் கதையம்சம் கொண்ட இந்த படம் விரைவில் வெளியாக இருப்பதாகவும் கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.