close
Choose your channels
anabel
friendship

லிங்குசாமி - ராம்பொத்தினேனி படப்பிடிப்பு: கிளாப் அடித்து தொடங்கி வைத்த பிரபல தயாரிப்பாளர்!

Tuesday, July 13, 2021 • தமிழ் Comments

ஆனந்தம், ரன், அஞ்சான் உள்பட பல வெற்றிப் படங்களை இயக்கிய இயக்குனர் லிங்குசாமி அடுத்ததாக பிரபல தெலுங்கு நடிகர் ராம் பொத்தினேனி நடிக்கும் புதிய படத்தை இயக்க இருக்கிறார் என்ற தகவலை ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது தொடங்கியுள்ளது. பிரபல தயாரிப்பாளர் சுபாஷ் சந்திர போஸ் அவர்கள் கிளாப் அடித்து படப்பிடிப்பை தொடங்கி வைத்தார்

ஶ்ரீனிவாசா சில்வர் ஸ்கிரீன் சார்பாக ஸ்ரீனிவாசா சித்தூரி தயாரிப்பில் உருவாகும் இந்த படத்தில் கீர்த்தி ஷெட்டி கதாநாயகியாக நடிக்கிறார். ஆதி பின்னிஷெட்டி, நதியா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். சுஜித் வாசுதேவ் ஒளிப்பதிவில் அன்பறிவ் ஸ்டண்ட் இயக்கத்தில் நவீன் நூலி படத்தொகுப்பில் இந்த படம் உருவாகவுள்ளது.

பிரம்மாண்டமான முறையில் பெரும் பொருட்செலவில், தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் உருவாகும் இப்படத்தின் தமிழக உரிமையை மாஸ்டர் பீஸ் என்ற நிறுவனம் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 

Get Breaking News Alerts From IndiaGlitz