close
Choose your channels
naaney_varuven
Ponniyin_Selvan
Buffoonn

நெகட்டிவ் விமர்சனங்கள் குவிந்தாலும் 'பீஸ்ட்' போலவே வசூல் செய்த 'சர்காருவாரி பாட்டா'

Saturday, May 14, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

விஜய் நடித்த ‘பீஸ்ட்’ திரைப்படத்திற்கு நெகடிவ் விமர்சனங்கள் குவிந்த போதிலும் முதல் நாளில் அந்த படம் உலகம் முழுவதும் 70 கோடி ரூபாய் வசூல் செய்தது. அதேபோல் சமீபத்தில் வெளியான மகேஷ்பாபுவின் ‘சர்காருவாரி பாட்டா’ திரைப்படத்திற்கும் நெகட்டிவ் விமர்சனங்கள் கிடைத்தபோதிலும் முதல் நாளில் உலக அளவில் 75 கோடி ரூபாய் வசூல் செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன .

‘சர்காருவாரி பாட்டா’ படத்தின் முதல் காட்சி முடிந்தவுடன் பல நெகட்டிவ் விமர்சனங்கள் சமூக வலைத்தளத்தில் குவிந்தது. மகேஷ்பாபு நடிப்பு நன்றாக இருந்தாலும் திரைக்கதை மற்றும் கீர்த்தி சுரேஷின் கேரக்டருக்கு கடும் விமர்சனங்கள் எழுந்தன.

ஆனால் அதே நேரத்தில் இந்த திரைப்படம் ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் மட்டும் முதல் நாளில் சுமார் 34 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது. எஸ்.எஸ்.ராஜமௌலியின் ’ஆர்.ஆர்.ஆர்’ படத்தை அடுத்து அதிக ஓப்பனிங் கிடைத்த படம் ‘சர்காருவாரி பாட்டா’ என கூறப்படுகிறது. அதேபோல் உலக அளவில் இந்த படம் 75 கோடி ரூபாய்க்கும் மேல் வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

’பீஸ்ட்’ படம் போலவே நெகட்டிவ் விமர்சனங்களையும் தாண்டி ‘சர்காருவாரி பாட்டா’ திரைப்படம் முதல் நாளில் நல்ல வசூல் செய்துள்ளது படக்குழுவினர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.