close
Choose your channels
LoveToday
CWK

லிப்ரா புரடொக்சன்ஸ் அடுத்த படத்திற்கு பாக்யராஜின் சூப்பர்ஹிட் பட டைட்டில்!

Saturday, July 9, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழ் திரையுலகின் முன்னணி தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான லிப்ரா புரொடக்ஷன் பல வெற்றி படங்களை தயாரித்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம்.

அந்த வகையில் லிப்ரா புரடொக்சன்ஸ் நிறுவனத்தின் அடுத்த திரைப்பட அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த திரைப்படத்திற்கு ’விடியும் வரை காத்திரு’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இதே நிலையில் கே பாக்யராஜ் இயக்கி நடித்த ஒரு திரைப்படம் கடந்த 1981ஆம் ஆண்டு வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.

சாஜி சலீம் என்பவர் இயக்கத்தில் உருவாக உள்ள ’விடியும் வரை காத்திரு’ திரைப்படத்தில் விதார்த், விக்ராந்த், கார்த்திக் குமார், இமானுவேல், மகாலட்சுமி உள்பட பலர் நடிக்கவுள்ளனர்.

விஷ்ணுவிஷாலின் ‘எப்.ஐ.ஆர்’ திரைப்படத்துக்கு இசை அமைத்த அஸ்வத் இசையமைக்கும் இந்த படத்தின் பூஜை இன்று சென்னையில் நடைபெற்றது. இந்த பூஜையில் சிறப்பு விருந்தினராக கே பாக்யராஜ் கலந்துகொண்டு படக்குழுவினருக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.