விக்னேஷ்சிவன் - நயன்தாரா: லேட்டஸ்ட் ரொமான்ஸ் புகைப்படம் வைரல்
தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான விக்னேஷ் சிவனும், லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவும் கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வருகின்றனர் என்பதும் இந்த ஆண்டு அவர்களுடைய திருமணம் நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்பதும் தெரிந்ததே
இந்த நிலையில் அவ்வப்போது விக்னேஷ் சிவன் தனது சமூக வலைத்தளத்தில் நயன்தாராவுடன் நெருக்கமாக உள்ள ரொமான்ஸ் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவு செய்து வருவார். அந்த புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெறும் என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் சற்று முன்னர் விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நயன்தாராவுடன் நெருக்கமாக உள்ள ரொமான்ஸ் புகைப்படம் ஒன்றை பதிவு செய்துள்ளார் இந்த புகைப்படம் வெளியான ஒரு சில மணி நேரத்தில் ஒரு லட்சத்துக்கும் அதிகமான லைக்ஸ்கள் குவிந்து உள்ளது என்பதும் இந்த புகைப்படத்திற்கு பல சுவராசியமான கமெண்ட்ஸ்கள் பதிவாகி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் ’காத்துவாக்குல ரெண்டு காதல்’ என்ற திரைப்படத்திலும் விக்னேஷ் சிவன் தயாரிப்பில் ‘நெற்றிக்கண்’ இந்த படத்திலும் நயன்தாரா நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது