close
Choose your channels
PatamPoochi
mayoon

லட்சுமி ராமகிருஷ்ணனா இது? உடல் எடையை குறைத்து ஸ்லிம்மாக மாறிய வைரல் புகைப்படம்!

Tuesday, June 29, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கொரோனா வைரஸ் ஊரடங்கு நேரத்தில் பல நடிகர் நடிகைகள் தங்களுடைய சமூக வலைதளப் பக்கங்களில் கிளாமர் மற்றும் அழகிய புகைப்படங்களை பதிவு செய்து நேரத்தை கழித்து வரும் நிலையில் நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் உருப்படியான ஒரு வேலையை செய்து உள்ளார். அவர் தனது உடல் எடையை நம்பமுடியாத அளவிற்கு குறைத்து ஸ்லிம்மாக மாறியுள்ளார்.

ஏற்கனவே ஸ்லிம்மாக மாறிய பின் மாடர்ன் டிரஸ் அணிந்த புகைப்படத்தை கடந்த சில நாட்களுக்கு முன்னர் அவர் தனது இன்ஸ்டவில் பதிவு செய்திருந்தார் என்பதும் அந்த புகைப்படம் வைரல் ஆனது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தற்போது மீண்டும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஸ்லிம்மான மாறியவுடன் உள்ள புகைப்படத்தை பதிவு செய்துள்ளார்.

உடல் எடையை குறைத்தால் நமது தன்னம்பிக்கையும் உயரும் என்றும் அவர் அதில் அவர் குறிப்பிட்டுள்ளதை அடுத்து இந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது. இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் லட்சுமி ராமகிருஷ்ணன் இவ்வளவு ஸ்லிம்மாக மாறிவிட்டாரா? என்று ஆச்சரியத்தில் மூழ்கி கமெண்ட்ஸ்களை பதிவு செய்து வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.