close
Choose your channels
Por
Joshwa

'அங்க இருக்குற ஒவ்வொரு நிமிஷமும் உன் உயிருக்கு ஆபத்து: 'நயன் தாராவின் 'கனெக்ட்' டிரைலர்

Friday, December 9, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்த ‘கனெக்ட்’ என்ற திரைப்படம் வரும் 22ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. அந்த வகையில் சற்று முன் இந்த படத்தின் டிரைலர் வெளியாகி இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

சுமார் இரண்டு நிமிடங்களுக்கு மேல் இருக்கும் இந்த ட்ரெய்லரில் நயன்தாரா குடும்பத்தினர் இருக்கும் வீட்டில் ஒரு அமானுஷ்ய சக்தி இருப்பது போன்ற காட்சிகள் உள்ளன

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா வழக்கம்போல் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். சத்யராஜ், அனுபம்கெர் போன்ற சீனியர் நடிகர்களுடன் நயன்தாரா நடித்துள்ள இந்த படத்தை ‘மாயா’ இயக்குனர் அஸ்வின் சரவணன் இயக்கியுள்ளார். மேலும் இந்த படத்தின் முக்கிய கேரக்டர்கள் வினய் மற்றும் ஹனியா நப்சியா நடித்துள்ளனர்.

மணிகண்டன் கிருஷ்ணமாச்சாரி ஒளிப்பதிவில் ரிசார்ட் கேவின் படத்தொகுப்பில் பிரித்வி சந்திரசேகர் இசையில் உருவாகியுள்ள இந்த படம் நயன்தாராவின் இன்னொரு வெற்றி படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.