close
Choose your channels
siren
lal_salaam

'நான் வரைகிற வானம் கை தொடுகிற தூரம்': 'கனெக்ட்' படத்தின் பாடல் ரிலீஸ்

Friday, December 16, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

லேடி சூப்பர் ஸ்டார் நடித்த ‘கனெக்ட்’ திரைப்படம் வரும் 22ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

அந்த வகையில் சற்று முன் ‘கனெக்ட்’ படத்தில் இடம்பெற்ற பாடல் ஒன்று வெளியாகி உள்ள நிலையில் அந்த பாடலின் வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

நயன்தாரா நடித்த ’மாயா’ என்ற திரைப்படத்தை இயக்கிய இயக்குனர் அஸ்வின் சரவணன் இந்த படத்தை இயக்கி உள்ளார் என்பதும் இந்த படம் திகில் மற்றும் குடும்ப சென்டிமென்ட் கதையம்சம் கொண்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த படத்தின் டிரைலர், டீசர் ஆகியவை சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் இந்த படத்திற்கு நல்ல எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது, நயன் தாராவுடன் சத்யராஜ், அனுபம்கெர் உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு பிரித்வி சந்திரசேகர் இசையமைத்துள்ளார்.

இந்த நிலையில் சற்று முன் வெளியான இந்த பாடலின் சில வரிகள் இதோ

நான் வரைகிற வானம் கை தொடுகிற தூரம்
ஓர் பறவையை நானும் வான் உரசிட வேணும்
மனம் குழந்தையாய் அடம் பிடிக்குதே

இடைவெளி இல்லாமல் கனவுகள் துரத்துதே
கடல் அலைகள் சொல்லாமல் என் காலடி உரசுதே

என் திசையெல்லாம் வானவில் தோன்றுமோ
பேரழகாக யாவுமே மாறுமோ

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.