close
Choose your channels
DJ

தோனி படத்தில் நயன்தாரா? ரஜினிக்கு நெருக்கமானவரின் மெகா திட்டம்!

Tuesday, May 10, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தல தோனி தயாரிக்கும் திரைப்படத்தில் நயன்தாரா நடிக்க இருப்பதாகவும் ரஜினிக்கு நெருக்கமானவரின் மெகா திட்டம் இது என்றும் கோலிவுட் வட்டாரங்கள் கூறுகின்றன.

முன்னாள் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனுமான தோனி தமிழ் திரைப்படம் தயாரிப்பதற்காக புதிய நிறுவனம் ஒன்றை தொடங்க இருப்பதாக கூறப்படுகிறது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திடம் உதவியாளராக இருந்த சஞ்சய் என்பவர் இந்த நிறுவனத்தை கவனிக்க இருப்பதாகவும் அவருடைய அறிவுறுத்தலின் பேரில் தோனி நிறுவனம் தயாரிக்கும் முதல் திரைப்படத்தில் நயன்தாரா முக்கிய கேரக்டரில் நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள இந்த படம் குறித்த அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்று தெரிகிறது.

தல தோனி இந்த ஆண்டுடன் ஐபிஎல் தொடரில் இருந்து ஓய்வு பெறுவார் என்று கூறப்படும் நிலையில், ஓய்வுக்கு பின் திரைப்பட தயாரிப்பு நிறுவனம் தொடங்கி அதில் முழுமையாக தன்னை ஈடுபடுத்த திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.