close
Choose your channels
cred

மணிரத்னம் படத்தில் இருந்து விலகிய பிரபலம்: அவருக்கு பதில் இவரா?

Tuesday, March 9, 2021 • தமிழ் Comments

மணிரத்னம் இயக்கிவரும் ’பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் அவரது தயாரிப்பில் உருவாகிவரும் ’நவரசா’ என்ற வெப்தொடரில் இருந்து பிரபலம் ஒருவர் விலகி உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன

நெட்பிளிக்ஸ் ஓடிடி நிறுவனத்திற்காக இயக்குனர் மணிரத்னம் தயாரித்து வரும் ’நவரசா’ என்ற வெப்தொடரை இயக்குனர்கள் ரதீந்திரன், கவுதம் வாசுதேவ் மேனன், கார்த்திக் நரேன், அரவிந்த்சாமி, கார்த்திக் சுப்புராஜ், ஹலிதா ஷமீம், பிஜாய் நம்பியார், கேவி ஆனந்த் மற்றும் பொன்ராம் ஆகிய ஒன்பது இயக்குனர்கள் 9 குறும்படங்களை இயக்கி வருகின்றனர் என்று செய்தி வெளியானது.

இந்த வெப்தொடர் விரைவில் வெளியாக உள்ள நிலையில் தற்போது வெளிவந்துள்ள தகவலின்படி கேவி ஆனந்த் இந்த தொடரில் இருந்து விலகி விட்டதாகவும் அவருக்கு பதில் இயக்குனர் வசந்த் புதிய தொடர் ஒன்றை இயக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன. மேலும் இயக்குனர் வசந்த் இயக்கவிருக்கும் இந்த தொடரில் முக்கிய கேரக்டரில் ’அருவி’ படத்தில் நடித்த அதிதி பாலன் நடிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்று தகவல்கள் வெளிவந்துள்ளன

Get Breaking News Alerts From IndiaGlitz