மணிமேகலை - பிரியங்கா விவகாரத்தில் நடந்தது என்ன? குரேஷி வெளியிட்ட வீடியோ..!
![](https://d1pyuwmru9u39x.cloudfront.net/images/player/play-spl.png)
![](https://d1pyuwmru9u39x.cloudfront.net/images/player/igplunmute.png)
Send us your feedback to audioarticles@vaarta.com
![](https://d1pyuwmru9u39x.cloudfront.net/images/player/igpl-like.png)
![](https://d1pyuwmru9u39x.cloudfront.net/images/player/igpl-dislike.png)
கடந்த சில நாட்களாக குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் மணிமேகலை மற்றும் பிரியங்கா இடையே ஏற்பட்ட பிரச்சனை குறித்த செய்திகள் வெளியாகி கொண்டிருக்கின்றன. இதுகுறித்து இந்த நிகழ்ச்சியில் கோமாளியாக இருந்து வரும் குரேஷி, வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் அவர் கூறியிருப்பதாவது:
திவ்யா துரைசாமி எலிமினேட் ஆன போது, அவரைப் பற்றி பேசலாமா என்று பிரியங்கா கேட்டபோது ரக்சன் ஓகே என்றார். ஆனால் மணிமேகலை, "நீங்கள் பேச வேண்டாம். ஏற்கனவே நீங்கள் இந்த நிகழ்ச்சியின் ஆங்கர் போல் பேசிக் கொண்டிருக்கிறீர்கள். அதனால் நீங்கள் பேச வேண்டாம்" என்று பிரியங்காவிடம் கூறியதால் அவர் அதிர்ச்சி அடைந்து வெளியேறிவிட்டார்.
அதன் பின்னர், அடுத்த வாரம் ஷூட்டிங் நடக்கும் போது, தன்னை பேசவிடாமல் தடுத்ததை குறித்து பிரியங்கா பேசலாம் என்று நினைத்தார். ஒரு சக போட்டியாளராக, என்னுடைய பேச்சுரிமை அங்கு தடுக்கப்பட்டுள்ளது என்பதை வெளிப்படுத்த நினைத்தார். ஆனால் அதற்குள் மணிமேகலை வெளியேறி இந்த பிரச்சனையை பொதுவெளிக்கு கொண்டு வந்துவிட்டார்.
நான் அங்கு இருந்தவரை, மேனேஜ்மென்ட் அல்லது பிரியங்கா மன்னிப்பு கேட்க சொல்லவில்லை. மணிமேகலை சுயமரியாதை என்னும் விஷயத்தை இங்கே எடுத்து வருகிறார். இங்கே எல்லோருக்கும் சுயமரியாதை உள்ளது. எனவே, பிரியங்காவை பேச அனுமதித்திருக்கலாம்.
உங்கள் இருவருக்கும் பிரச்சனை இருக்கின்றது என்றால், அதை தனியாக பேசியிருக்கலாம். தனியாக பேசியிருந்தால், இந்த விஷயம் சுலபமாக முடிந்திருக்கும். ஆனால், சிறப்பு விருந்தினர்கள் கலந்து கொண்ட நேரத்தில் இப்படி சண்டை போட்டது எல்லோருக்கும் தர்மசங்கடமாக இருந்தது என்று குரேஷி கூறினார்.
இந்த விவகாரத்தில், மணிமேகலைக்கு ஆதரவாக பல்வேறு நபர்கள் கருத்து தெரிவித்து வரும் நிலையில், 5 நாட்கள் கழித்து குரேஷி வெளியிட்டுள்ள இந்த வீடியோ பெரும் சர்ச்சைக்கு உள்ளாகியுள்ளது.
கடைசில இவனும் பிரியங்காவுக்கு சொம்பு தூக்க வந்துட்டான்...
— மெட்ராஸ் பையன் (@madraspaiyan_) September 19, 2024
நல்லா யாரோ எழுதி கொடுத்ததை பேசுறடா 🤦♂️#Manimegalai
#Kuraishi #PriyankaDeshpande #CookwithComali5 #CWC5 #BiggBossTamil8 pic.twitter.com/r4TR3EBwDu
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments