close
Choose your channels

பிரசாந்தின் 'அந்தகன்' படத்தில் இணைந்த பிரபல இயக்குனர்!

Saturday, January 9, 2021 • தமிழ் Comments

பாலிவுட்டில் சூப்பர் ஹிட்டான ’அந்தாதூன்’ என்ற திரைப்படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிகர் பிரசாந்த் நடிக்க உள்ளார் என்றும் இந்த படத்தின் டைட்டில் ’அந்தகன்’ என அதிகாரபூர்வமாக சமீபத்தில் அறிவிக்கப்பட்டது என்பதையும் ஏற்கனவே பார்த்தோம்.

ஜோதிகா நடித்த ’பொன்மகள் வந்தாள்’ என்ற படத்தை இயக்கிய ஜேஜே பெடரிக் இயக்கத்தில் சந்தோஷ் நாராயணன் இசையில் உருவாகவுள்ள இந்த படத்தில் முக்கிய வேடத்தில் சிம்ரன் மற்றும் கார்த்திக் ஆகியோர் நடிக்க உள்ளதாகவும் ஏற்கனவே வெளிவந்த செய்திகளை பார்த்தோம்.

பிரசாந்தின் தந்தை தியாகராஜன் தயாரிக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ள நிலையில் தற்போது கமல்ஹாசன், ரஜினிகாந்த் உள்ளிட்ட பல பிரபலங்களின் படங்களை இயக்கிய கே.எஸ்.ரவிகுமார் முக்கிய வேடத்தில் நடிக்கவிருப்பதாக படக்குழுவினர் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர். இந்த படத்தில் கே.எஸ்.ரவிகுமார் இணைந்தது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Get Breaking News Alerts From IndiaGlitz