close
Choose your channels

பிக்பாஸ் நடிகை வீட்டில் தவழ்ந்து விளையாடிய குழந்தை கிருஷ்ணன்: வைரலாகும் புகைப்படங்கள்

Tuesday, August 11, 2020 • தமிழ் Comments

கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் பாகத்தில் வைல்ட்கார்ட் எண்ட்ரியாக வந்தவர் நடிகை சுஜா வருணி. இவர் சினேகன் உள்பட மற்ற போட்டியாளர்களுக்கு கடுமையான போட்டி கொடுத்து கிட்டத்தட்ட கடைசி வரை இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியே வந்ததும் தனது நீண்ட கால காதலரும், நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் பேரனும் ராம்குமாரின் மகனுமான சிவகுமாரை திருமணம் செய்து கொண்டார். சிவகுமார்-சுஜா தம்பதிக்கு கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் அழகிய ஆண் குழந்தை பிறந்தது. இந்தக் குழந்தைக்கு ஆத்வைத் என்று பெயர் சூட்டினர்

இந்த நிலையில் இன்று கிருஷ்ண ஜெயந்தி கொண்டாடப்பட்டு வரும் நிலையில் சுஜா வருணி தனது ஒரு வயது மகனுக்கு கிருஷ்ணன் போல் அலங்கரித்து புகைப்படங்கள் எடுத்து சமூக வலைதளங்களில் பதிவு செய்தார். இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. சிவாஜி குடும்பத்தின் வாரிசான குழந்தை, கிருஷ்ணன் வேடத்தில் இருந்தததை அவரது ரசிகர்கள் பார்த்து மகிழ்ந்து வருகின்றனர்

Get Breaking News Alerts From IndiaGlitz