close
Choose your channels

அசோக் செல்வன் நடித்த 'கூட்டத்தில் ஒருவன்': திரை முன்னோட்டம்

Monday, July 10, 2017 • தமிழ் Comments

'தெகிடி', 144, 'சில சமயங்களில்' உள்பட ஒருசில படங்களில் நடித்த அசோக் செல்வன் நடித்த அடுத்த படம் 'கூட்டத்தில் ஒருவன்'. அறிமுக இயக்குனர் ஞானவேல் இந்த படத்தை இயக்கியுள்ளார். இவர் ஏற்கனவே ராதாமோகன் இயக்கிய 'பயணம்', சூர்யாவின் 'ரத்த சரித்திரம்' ஆகிய படங்களுக்கு வசனம் எழுதியவர் என்பது குறிப்பிடத்தக்கது. அசோக் செல்வன், ப்ரியா ஆனந்த், சமுத்திரஃக்கனி, பால சரவணன், நாசர் உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு நிவாஸ் கே.பிரசன்னா இசையமைத்டுள்ளார். டிரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் எஸ்.ஆர்.பிரபு, எஸ்.ஆர்.பிரகாஷ்பாபு ஆகியோர் தயாரித்திருக்கும் இந்த படம் வரும் வெள்ளியன்று வெளியாகவுள்ளது.

இந்த படத்திற்கான புரமோஷன் பாடல் ஒன்றில் சிவகுமார், சூர்யா, ஆர்யா, சிவகார்த்த்கேயன் விஜய்சேதுபதி, விஷ்ணு விஷால், பிரகாஷ்ராஜ், ஆர்ஜே பாலாஜி, லிங்குசாமி ஆகியோர் தோன்றியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படத்தின் கதை குறித்து இயக்குனர் ஞானவேல் ஒரு பேட்டியில் கூறியபோது, 'நான் பத்திரிக்கையில் வேலை பார்க்கும் போது எனக்கு கிடைத்த அனுபவம் தான் இந்த படம். நான் கார்த்தியை பேட்டி காணும் போது "நான் என்னுடைய குடும்பத்தில் நடு பையனாக பிறந்தததால் என் மீது யாருக்கும் பெரிதாக கவனம் இருக்காது. முதல் பையன் அண்ணன் சூர்யா அம்மா செல்லம் , எங்கள் வீட்டின் கடைசி பிள்ளை என் தங்கை அவர் அப்பா செல்லம். இடையில் பிறந்த நான் எல்லோருக்கும் பொது என்று இருந்து வந்தேன்" என்று அவர் கூறியது தான் இந்த படம் உருவாவதற்கு முக்கிய புள்ளி. இந்த உலகத்தை மாற்றிய பலர் நடு பெஞ்ச் மாணவர்கள் தான். அப்படிப்பட்ட நல்ல கருத்தை கூறும் படம் தான் இது' என்று கூறினார்.

இந்த படத்தின் டிரைலர் சமீபத்தில் ஹிட்டாகிய நிலையில் படமும் ஹிட்டாகுமா என்பதை வரும் வெள்ளியன்று திரை விமர்சனத்தில் பார்ப்போம்.

Get Breaking News Alerts From IndiaGlitz