close
Choose your channels
iruttu
Capmaari

முன்னணி நிறுவனத்தின் அடுத்த பட டைட்டில் அறிவிப்பு

Tuesday, November 5, 2019 • தமிழ் Comments

கோலிவுட் திரையுலகின் முன்னணி தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான கேஜேஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம் கடந்த சில ஆண்டுகளில் அடுத்தடுத்து வெற்றிகளை பெற்றுவரும் நிறுவனம் என்பது தெரிந்த்தே. இந்நிறுவனம் தயாரித்த லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவின் ’அறம்’ வெற்றி பெற்றதையடுத்து தற்போது சிவகார்த்திகேயன் நடித்து வரும் ’ஹீரோ’ என்ற படத்தை தயாரித்து வருகிறது 

அது மட்டுமின்றி தல அஜித் நடித்த விஸ்வாசம் என் திரைப்படத்தை தமிழகம் முழுவதும் ரிலீஸ் செய்து மிகப்பெரிய வசூலை பெற்ற இந்நிறுவனம் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது 

இந்த நிலையில் கேஜேஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கும் புதிய படத்தின் டைட்டில் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்திற்கு ’ஆலம்பனா’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் டைட்டிலுடன் கூடிய ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சற்று முன் வெளியாகி உள்ளது 

வைபவ், பார்வதி, முனிஷ்காந்த் உள்பட பலர் நடிக்கும் இந்த படத்தை பாரி விஜய் இயக்கவுள்ளார். ஹிப்ஹாப் தமிழா ஆதி இந்த படத்திற்கு இசையமைக்கவுள்ளார்.

Get Breaking News Alerts From IndiaGlitz