close
Choose your channels
Por
Joshwa

'கேஜிஎஃப்' புகழ் யாஷின் 19வது படத்தின் மாஸ் டைட்டில் அறிவிப்பு..! ரிலீஸ் தேதி இதுதான்..!

Friday, December 8, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கேஜிஎப் மற்றும் கேஜிஎப் 2 ஆகிய இரண்டு படங்களின் மூலம் உலக அளவில் பிரபலமானவர் நடிகர் யாஷ் என்பதும் இவரது அடுத்த படமான ’யாஷ் 19’ படத்தின் டைட்டில் அறிவிப்பு இன்று வெளியாகும் என்பதும் தெரிந்ததே. இந்த நிலையில் யாஷ் நடிக்கும் 19-வது திரைப்படத்தின் மாஸ் டைட்டில் அறிவிப்பு சற்றுமுன் வெளியாகியுள்ளது.

யாஷ் நடிக்கும் 19-வது திரைப்படத்தை பெண் இயக்குனர் கீத்து மோகன் தாஸ் இயக்குவது டைட்டில் வீடியோவில் உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த படம் தமிழ், கன்னடம், மலையாளம், தெலுங்கு, ஹிந்தி என பான் இந்திய திரைப்படமாக உருவாவதால் அனைத்து மொழிகளுக்கும் பொதுவான ’டாக்ஸிக்’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. மேலும் டைட்டில் வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

இந்த படத்தை கேவிஎன் புரொடக்ஷன் என்ற நிறுவனம் தயாரித்து வரும் நிலையில் இந்த படத்தின் மற்ற தகவல்கள் வெகு விரைவில் வெளியாகவுள்ளது. மேலும் இந்த படம் 2025 ஆம் ஆண்டு ஏப்ரல் 10ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.