close
Choose your channels
naaney_varuven
Ponniyin_Selvan

'கேஜிஎப்' ராக்கிபாய் சகோதரியா இவர்? செம க்யூட்டாக இருப்பதாக நெட்டிசன்கள் கமெண்ட்ஸ்!

Thursday, August 11, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

இன்று ரக்ஷா பந்தன் திருநாளை முன்னிட்டு திரையுலக பிரபலங்கள் தங்கள் சகோதர சகோதரிகளுக்கு ராக்கி கயிறு கட்டி கொண்டாடி வருகின்றனர்.

அந்த வகையில் ’கேஜிஎப்’ திரைப்படத்தின் நாயகனான யாஷ், தனது சகோதரி நந்தினிக்கு ராக்கி கயிறு கட்டும் புகைப்படத்தை தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ள நிலையில் அந்த புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாகி வருகின்றன.

ரக்ஷா பந்தன் நாளை முன்னிட்டு நந்தினி தனது சகோதரர் யாஷுக்கு ராக்கி கயிறு கட்டும் புகைப்படங்களும், யாஷ் தனது சகோதரிக்கு ராக்கி கயிறு கட்டும் புகைப்படங்களும் யாஷின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் யாஷின் சகோதரி செம க்யூட்டாக இருப்பதாக கமெண்ட்ஸ் பதிவு செய்து வருகின்றனர். மேலும் இந்த புகைப்படங்களுக்கு 17 லட்சத்திற்கும் அதிகமான லைக்ஸ் கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

யாஷின் சகோதரி நந்தினி கம்ப்யூட்டர் சாப்ட்வேர் எஞ்சினியர் ஒருவரை திருமணம் செய்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.