close
Choose your channels

க்ளின் போல்ட்: வேற லெவலில் வைரலாகும் கீர்த்தி சுரேஷின் பெளலிங் வீடியோ!

Sunday, July 25, 2021 • தமிழ் Comments

பிரபல நடிகை கீர்த்தி சுரேஷ் பெளலிங் போட்டு கிளீன் போல்ட் ஆகும் வீடியோ ஒன்று அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ள நிலையில் இந்த வீடியோவுக்கு 10 லட்சத்துக்கும் அதிகமான லைக்ஸ் கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

தமிழ் திரையுலகில் ஏ.எல்.விஜய் இயக்கிய ’இது என்ன மாயம்’ என்ற திரைப்படத்தில் அறிமுகமாகி அதன் பின்னர் ’நடிகையர் திலகம்’ என்ற திரைப்படத்தில் சிறப்பாக நடித்ததற்காக தேசிய விருது பெற்றவர் நடிகை கீர்த்தி சுரேஷ் என்பது தெரிந்ததே. விஜய், சூர்யா, தனுஷ், விக்ரம் உட்பட பல முன்னணி நடிகர்களுடன் நடித்த கீர்த்தி சுரேஷ் தெலுங்கில் பிரபல நடிகையாக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் சமூக வலைதளத்தில் ஆக்டிவ்வாக இருக்கும் கீர்த்தி சுரேஷின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மட்டும் சுமார் 10 மில்லியன் பேர்கள் ஃபாலோயர்களாக இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சமீபத்தில் அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மொட்டை மாடியில் பெளலிங் போடும் வீடியோ ஒன்றை பதிவு செய்துள்ளார்/ அந்த வீடியோவில் கனகச்சிதமாக அவர் பெளலிங் போட்டு க்ளின் போல்ட் ஆக்கும் காட்சிகள் உள்ளன. கீர்த்தி சுரேஷின் பெளலிங்கிற்கு அவரது செல்ல நாய்க்குட்டி தான் அம்பயராக உள்ளது என்பதும், இந்த வீடியோ தற்போது மிகப்பெரிய அளவில் வைரலாகி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Get Breaking News Alerts From IndiaGlitz