close
Choose your channels
NMM
NMM

வடிவேலு பிறந்த நாளில் முக்கிய அறிவிப்பை வெளியிட்ட கீர்த்தி சுரேஷ்!

Wednesday, September 14, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நேற்று வைகைப்புயல் வடிவேலு தனது பிறந்த நாளை கொண்டாடினார் என்பதும் அவரது பிறந்த நாள் ’மாமன்னன்’ படக்குழுவினர் மத்தியில் சிறப்பாக கொண்டாடப்பட்டது என்பதும் தெரிந்ததே. வடிவேலு பிறந்தநாள் கொண்டாட்டம் குறித்த புகைப்படங்களும் இணையதளங்களில் வைரலாகியது.

இந்த நிலையில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி நடிப்பில் உருவாகிவரும் ’மாமன்னன்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தின் நாயகி கீர்த்தி சுரேஷ் படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் நேற்று வைகைப் புயல் வடிவேலுவின் பிறந்த நாள் கொண்டாட்டத்தில் கலந்து கொண்ட கீர்த்தி சுரேஷ் அது குறித்த புகைப்படங்களை தனது இன்ஸ்டாவில் பதிவு செய்து ’வடிவேலு அவர்களின் பிறந்தநாள் கொண்டாட்டத்துடன் ’மாமன்னன்’ படத்தின் எனது பகுதியின் படப்பிடிப்பை முடித்து விட்டேன்’ என்று கூறியுள்ளார்.

மேலும் ’மாமன்னன்’ படத்தில் கீர்த்தி சுரேஷின் காட்சிகளின் படப்பிடிப்பு மட்டுமின்றி இந்த படத்தின் மொத்த படப்பிடிப்பும் முடிவடைந்துள்ளது. படப்பிடிப்பு முடிவடைந்ததை படக்குழுவினர் கொண்டாடிய புகைப்படம் வைரலாகி வருகிறது.

இசைப்புயல் ஏ ஆர் ரகுமான் இசையில் உருவாகிவரும் ’மாமன்னன்’ படத்தை உதயநிதியின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. இந்த படம் அடுத்த ஆண்டு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.