close
Choose your channels
Por
Joshwa

கல்யாணம் மிகப்பெரிய பாதுகாப்பு.. அந்த அங்கீகாரம் கிடைச்சா மட்டும் தான் வாழ்க்கை: 'கண்ணகி' டிரைலர்..

Sunday, December 3, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

அம்மு அபிராமி, கீர்த்தி பாண்டியன் உட்பட 4 முக்கிய பெண் கேரக்டர்களை மையமாக கொண்டு உருவாக்கப்பட்ட ‘கண்ணகி’ படத்தின் டிரைலர் இன்று வெளியாகி இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

பல மாப்பிள்ளைகள் வந்து பெண் பார்த்தும் கல்யாணம் ஆகாமல் இருக்கும் அம்மு அபிராமி, கல்யாணம் ஆகி விவாகரத்து கேட்கும் கணவருக்கு விவாகரத்து தர முடியாது என்று கூறும் வித்யா பிரதீப், கல்யாணத்தை விளையாட்டாக எடுத்துக் கொள்ளும் ஷாலினி மற்றும் கல்யாணம் ஆகி கர்ப்பமாகி இருக்கும் கீர்த்தி பாண்டியன் கர்ப்பத்தை கலைக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஆகிய நான்கு வித்தியாசமான கோணங்களில் உள்ள பெண்கள் எடுக்கும் முடிவுதான் இந்த படத்தின் கதை என்பது குறிப்பிடத்தக்கது.

கீர்த்தி பாண்டியன், அம்மு அபிராமி, ஷாலின் மற்றும் வித்யா பிரதீப் ஆகிய நான்கு முக்கிய கேரக்டர்கள் நடித்திருக்கும் இந்த படத்தில் மயில்சாமி உள்பட பலர் நடித்துள்ளனர்.

யஷ்வந்த் கிஷோர் இயக்கத்தில் ஷான் ரகுமான் இசையில் உருவான இந்த படம் டிசம்பர் 15ஆம் தேதி திரையில் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில் உள்ள நான்கு பெண் கேரக்டர்களும் அழுத்தமாக வடிவமைக்கப்பட்டுள்ளதால் நிச்சயம் இந்த படம் ரசிகர்களை கவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.