பாகிஸ்தான் அணியுடன் ஒப்பிட்டு நடிகையை கிண்டல் செய்த பாஜக


Send us your feedback to audioarticles@vaarta.com


சமீபத்தில் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதியது. இந்த போட்டியில் பாகிஸ்தானை இந்தியா 162 ரன்களுக்குள் சுருட்டியது. இதற்கு முக்கிய காரணம் சுழற்பந்துவீச்சாளர் கேதவ் ஜாதவ்வின் அபாரமான பந்துவீச்சு. அவர் இந்த போட்டியில் 23 ரன்கள் மட்டுமே கொடுத்து மூன்று முக்கிய விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.
இந்த நிலையில் கேதார் ஜாதவ்வின் பந்துவீச்சை குறிப்பிட்ட நடிகையும் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் எம்பியுமான திவ்யா ஸ்பந்தனா, 'கேதர் ஜாதவின் பந்துவீச்சு வேகம் குறைந்துள்ளது. ஆனால், இந்திய ரூபாயின் மதிப்பின் அளவுக்கு குறைந்துவிடவில்லை” என மத்திய அரசை கிண்டல் செய்யும் வகையில் ஒரு டுவிட்டை பதிவு செய்திருந்தார். இவர் தனுஷ் நடித்த 'பொல்லாதவன்' உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் நடிகை திவ்யாவுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் கர்நாடக பாஜகவின் அதிகாரபூர்வ டுவிட்டர் பக்கத்தில், 'கேதர் ஜாதவ் பந்து வீச்சை பற்றி எந்த கருத்தும் இல்லை. ஆனால், உங்கள் அறிவுத்திறன் ஒட்டு மொத்த பாகிஸ்தான் அணியின் செயல்பாட்டை விட குறைவுதான்” என்று பதிவு செய்யப்பட்டிருந்தது. மேலும் இந்த பதிவில் திவ்யா குறித்து ஏராளமான விமர்சனங்கள் கமெண்ட் பகுதியில் பாஜகவினார் பதிவு செய்து வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments