close
Choose your channels

சம்யுக்தா ஹெக்டே ஸ்போர்ட்ஸ் பிரா அணிந்து உடற்பயிற்சி செய்தாரா? காங்கிரஸ் பெண் பிரமுகர்

Sunday, September 6, 2020 • தமிழ் Comments

ஜெயம் ரவி நடித்த ‘கோமாளி’ திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்த நடிகை சம்யூக்தா ஹெக்டே, சமீபத்தில் பெங்களூரில் உள்ள ஒரு பூங்காவில் ஸ்போர்ட்ஸ் பிரா அணிந்து உடற்பயிற்சி செய்ததாகவும் இதனை தட்டிக்கேட்ட காங்கிரஸ் பிரமுகர் கவிதா ரெட்டிக்கும் அவருக்கும் பிரச்சனை ஏற்பட்டதாகவும் செய்திகள் வெளியானது.

இந்த நிலையில் இதுகுறித்து காங்கிரஸ் பிரமுகர் கவிதா ரெட்டி விளக்கம் அளித்துள்ளார். சம்யுக்தா ஹெக்டே ஸ்போர்ட்ஸ் பிரா அணிந்து உடற்பயிர்ச்சி செய்வதை நான் தவறாக கருதவில்லை என்றும் அவர் பூங்காவில் அதிக சத்தத்துடன் பாடலை கேட்டுக் கொண்டே உடற்பயிற்சி செய்வதை மட்டுமே தட்டி கேட்டதாகவும் ஆனால் சம்யுக்தா பிரச்சினையை திசை திருப்புவதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும் சம்யுக்தாவின் தோழி ஒருவர் தன்னை கெட்ட வார்த்தையால் திட்டியதாகவும், அதனால் கோபம் வந்து நான் அவர் கன்னத்தில் அறையும் சென்றதாகவும் ஆனால் அவரை அடிக்க வில்லை என்றும் கவிதா ரெட்டி கூறியுள்ளார். சம்யுக்தாவின் உடையை கேலி செய்ததாக அவர் கூறுவது முழுக்க முழுக்க பொய் என்றும் நான் எந்தப் பெண்ணின் உடை குறித்தும் அதில் உள்ள கட்டுப்பாடுகள் குறித்தும் பேசியதே கிடையாது என்றும் கூறினார்.

மேலும் நானே அதே பூங்காவில் ஷார்ட்ஸ் அணிந்து உடற்பயிற்சி செய்துள்ளேன் என்றும் அந்த பூங்காவில் எந்தவித கட்டுப்பாடும் இல்லை என்றும் அவர் கூறியுள்ளார். சம்யுக்தா அதிக சத்தமாக பாட்டு போட்டு கேட்டது மட்டுமே பிரச்சனைக்கு காரணம் என்றும் ஆனால் அதை மறைக்க சம்யுக்தா பிரச்சனையை திசை திருப்பியதாகவும் அவர் விளக்கமளித்துள்ளார். காங்கிரஸ் பிரமுகர் கவிதா ரெட்டியின் இந்த விளக்கம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Get Breaking News Alerts From IndiaGlitz