இரண்டாம் பாதியாவது சந்தோஷமா இருக்குமா? கவினின் புலம்பல் பதிவு
பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அதன் மூலம் பெரும் புகழ்பெற்ற நடிகர் கவின், அவ்வப்போது தனது சமூக வலைத்தளத்தில் ஆக்டிவாக இருப்பதை பார்த்து வருகிறோம். குறிப்பாக அவரது ஜாலியான பதிவுகள் சமூக வலைத்தளங்களில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
இந்த நிலையில் இந்த ஆண்டு முதல் பாதி மிகவும் சோகமாக முடிந்துவிட்டதாகவும் இரண்டாம் பாதியாவது சந்தோசமாக இருக்கும் என்று தான் நம்புவதாகவும் ஒரு பதிவை நடிகர் கவின் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். அதில் அவர் கூறியதாவது: 2020 ஆம் ஆண்டு... போதும்ப்பா, முதல் பாதி சோகமாக இருந்தாலும் இரண்டாவது பாதி சந்தோசமா முடித்து வைப்பார்கள் என்று நம்புகிறேன். பார்த்து பண்ணுங்க’ என்று அவர் புலம்பல் தொனியில் பதிவு செய்துள்ளார். இந்த பதிவுக்கு அவரது ரசிகர்கள் ஆதரவான கமெண்ட்டுக்களை பதிவு செய்து வருகின்றனர்.
கவின் கூறியதுபோல் 2020 ஆம் ஆண்டின் முதல் பாதி உலகம் முழுவதும் உள்ள மக்களுக்கு மிகவும் சோகமான ஆண்டாக அமைந்துள்ளது. இந்த நிலையில் தற்போது 2020 ஆம் ஆண்டின் ஆறு மாதங்கள் முடிவடைந்துள்ள நிலையில், மீதி உள்ள ஆறு மாதங்களாவது கவின் கூறியது போல் சந்தோசமாக அமையுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.